காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
- கடந்த சில நாட்களாக அப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை.
- சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்ப்பட்டமங்கலம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இங்குள்ள பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் குடிநீர் வழங்கதை கண்டித்து மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில், மயிலாடுதறை அருகே சீனிவாசபுரம் பகுதியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அதிகாரிகள் வரவேண்டும் என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததார்.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலைமறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.