ரூ.3 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்
- சுமார் 4.50 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை சேதம் அடைந்துள்ளது.
- 3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியம் தாழஞ்சேரி ஊராட்சி, வரகடை கிராமத்தில் தொடங்கி நாராயணமங்கலம், திருவாளபுத்தூர் வழியாக கடக்கம் வரை சுமார் 4.50 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை சேதம் அடைந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர்.
பொதுமக்களின் தொடர் கோரிக்கையையடுத்து இந்த மார்க்கத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (2021-2022) -இன் கீழ் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த பணியினை மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட குழு உறுப்பினரும், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும்மான இளையபெருமாள், உதவி பொறியாளர் கார்த்திக்கேயன், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ்கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் வடவீரபான்டியன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.