உள்ளூர் செய்திகள்

அருவங்காடு-ஜெகதளா இடையே ரூ.1.12 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணி

Published On 2023-10-19 09:33 GMT   |   Update On 2023-10-19 09:33 GMT
  • குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி
  • நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் பங்கேற்பு

அருவங்காடு,

குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு- ஜெகதளா இடைேயேயான ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அங்கு அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்தன.

எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருவங்காடு- ஜெகதளா ரோட்டை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அந்த சாலையை சீரமைக்க தற்போது ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அருவங்காடு- ஜெகதளா ரோட்டில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

இதற்கான நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், செயற்பொறியாளர் வின்சென்ட், பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணைத்தலைவர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News