உள்ளூர் செய்திகள் (District)

எமதர்மராஜா, சித்திரகுப்தன் போன்று வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-11-20 09:27 GMT   |   Update On 2023-11-20 09:27 GMT
  • தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருவாரூர்:

திருவாரூர் சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், தாளாளருமான வெங்கட்ராஜூலு தலைமையிலும் நேதாஜி கல்வி குழுமத்தினுடைய இயக்குநனரும்), மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி தாளாளருமான விஜயசுந்தரம் முன்னிலையில் நேதாஜி கல்வி நிறுவனங்கள், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கி இணைந்து மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவர்கள் எமதர்மராஜா (மற்றும்) சித்திரகுப்தன் வேடமணிந்து சாலை பயணத்தில் கவனமின்மையால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாகவும், தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலை விதிகளை கடைபிடிப்போம், படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம், இருசக்கர வாகனங்கள் செல்லும் பொழுது அவசியம் சீட் பெல்ட் அணிவோம், மதுஅருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்கவும் வேகத்தடையில் மெதுவாக செல்லவும், போன்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

விழிப்புணர்விற்கு சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கீழ்காவாதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தலைக்கோவன், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் வினோத் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டிய 1000 ஆயிரம் நபர்களுக்கு மரக்கன்று கள்வழ ங்கப்பட்டது.

மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல்க ல்லூரியின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர்மை நேயத்தினை மனதில் கொண்டு ரத்ததானம் செய்தனர்.

விழாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தினுடைய செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினுடைய முதல்வர் சிவகுருநாதன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நிர்மல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியினுடைய முதல்வர் ராமபிரபா, துணை முதல்வர்,துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News