ஊட்டி-மஞ்சூர் குந்தா ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகள்
- சாலையோரத்தில் மண் வெட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது
- வாகனங்கள் சிரமங்களுக்கு மத்தியில் தடுமாறி சென்று வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூர் குந்தா ரோட்டில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக சாலையோரத்தில் மண் வெட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது. எனவே ரோட்டில் ஆங்காங்கே குவியல் குவியலாக மண் கொட்டப்பட்டு உள்ளது.
இது மழை காலம் என்பதால் ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக, சாலை முழுவதும் நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
எனவே அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் சிரமங்களுக்கு மத்தியில் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே ஊட்டி மஞ்சூர் குந்தா பகுதியில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.