ஆலங்குளத்தில் 13 விவசாயிகளுக்கு சுழற்கலப்பை-யூனியன் சேர்மன் வழங்கினார்
- ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் சிறு, குறு விவசாயிகளுக்கு சுழற்கலப்பையை வழங்கினார்.
- நிகழ்ச்சியில் ஆலங்குளம்,ஊத்துமலை பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை எந்திர மயமாக்கும் துணை இயக்க திட்டத்தின் கீழ் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை பகுதியில் உள்ள 13 விவசாயிகளுக்கு சுழற்கலப்பை வழங்கும் விழா நடந்தது.
வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஊமைத்துரை தலைமை தாங்கினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் வெங்கட சுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா, வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் கணேசன், செந்தில்குமார், புஷ்பமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் அறிவழகன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 507 மதிப்புள்ள 13 சுழற்கலப்பையை 9 சிறு, குறு விவசாயிகளுக்கு 42 ஆயிரம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 4 சுழற்கலப்பை 34 ஆயிரம் மானியத்திலும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை பகுதியில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.