கடைகளில் விற்பனை செய்த அழுகிய மீன்கள் பறிமுதல்
- வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் தரமற்ற அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- நீண்ட நாட்களான பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோ க்கிய மாதா பேராலயத்திற்கு தினம்தோறும் ஆயிரக்க ணக்கான மக்கள்வந்து செல்கின்றனர். வேளா ங்கண்ணி பேருந்து நிலையம் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் ஏராளமான வறுவல் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தரமற்ற அழுகிய உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி கடற்கரை வரை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகி நீண்ட நாட்கள் ஆன பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தரமற்ற சுமார் 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைகளுக்கு சீர் வைத்தனர். மேலும் கடை ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உரிமையாளர்களை எச்சரி த்தனர். வேளாங்கண்ணியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது.