ரேசன் கடை பூட்டை உடைத்து ரூ.18 ஆயிரம் திருட்டு
- ரேஷன் கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
- ஆலக்குடியில் 3 டிராக்டர்களில் பேட்டரிகள் திருட்டு போயிருப்பது.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள ஆலக்குடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக நியாய விலை கடை இயங்கி வருகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இக்கடை மூலமாக அரிசி, சீனி, மண்ணெண்ணைய் உள்பட பல பொருட்கள் விநியோகப்பட்டு வருகிறது.
நேற்று நியாய விலை கடையில் பொருட்கள் விற்பனை செய்த பணம் ரூபாய் 18 ஆயிரத்தை கடையில் வைத்துவிட்டு விற்பனையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை ரேஷன் கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொ ண்டனர்.
அப்போது கடையில் கல்லாவில் இருந்த பணம் 18 ஆயிரம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து நியாய விலை கடை செகரேட்டரி சுரேஷ் என்பவர் கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதே போல் ஆலக்குடியில் உள்ள 4 அரசு பள்ளிகளின் அலுவலகத்தின் பூட்டுகளையும் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு பணம் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் ஆலக்குடியில் 3 டிராக்டர்களின் பேட்டரிகள் திருட்டு போயிருப்பது குறிப்பிடதக்கது.
இச்சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.