உள்ளூர் செய்திகள்
ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மையம்:மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்
- பவுனாம்பாள் நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
- நகர் நல அலுவலர் எழில் மதனா, வார்டு செயலாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பவுனாம்பாள் நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகர மேயர் சுந்தரி ராஜா கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நகரத்துடன் நல வாழ்வு மையத்தை திறந்து வைத்து மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். இதில் பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர் சாய்துநிஷா சலீம், நகர் நல அலுவலர் எழில் மதனா, வார்டு செயலாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.