பண்ருட்டி ஒர்க் ஷாப்பில் ரூ.2.50 லட்சம் பணம், மோட்டார் சைக்கிள் திருட்டு
- புருேஷாத்தம்மன் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
- 2.50 லட்சம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது.
கடலூர்:
பண்ருட்டி அருகே எம்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன். இவரது மகன் புருேஷாத்தம்மன் (வயது 45) இவர் பண்ருட்டி திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு புருேஷாத்தம்மன் ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.பின் நேற்று காலை ஒர்க் ஷாப் வந்து பார்த்து போது மர்ம நபர்கள் ஒர்க் ஷாப் கடையின் பூட்டை உடைத்து ஒர்க் ஷாப்பில் இருந்த 2.50 லட்சம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புருேஷாத்தம்மன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், குற்றப்பிரிவு சப் -இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் கூப்பர், கைரேகை நிபுணர் ஸ்ரீதர் தலைமையில் தடயங்கள் சேகரித்தனர்.