திருவேங்கடநாதபுரத்தில் ரூ. 1 கோடியில் புதிய தார்ச்சாலை- பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்
- குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
- பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்தனர்.
இதனையடுத்து நபார்டு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை சுமார் ரூ.1 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்.
இதில் மானூர் யூனியன் கவுன்சிலர் முபின் முகமது இஸ்மாயில், பாளை யூனியன் கவுன்சிலர் ராஜாராம், திருவேங்க டநாதபுரம் பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரை, துணைத்தலைவர் கும ரேசன், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் கவிதா, நிர்வாகிகள் சந்தி ரசேகர், ஆவுடையப்பன், தி.மு.க. கிளை செயலாளர் குன்னத்தூர் ராஜகோபால், வேலாயுதம், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய சாலை பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.