கயத்தாறு அருகே ரூ.38 லட்சம் மதிப்பில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
- குப்பனாபுரம் உள்ளிட்ட ஊர்களில் நடந்த மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி , தேவைகளை கேட்டறிந்து அதற்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
- நிகழ்ச்சியில் குப்பனாபுரம் கிராமத்தில் 22 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, விதவைகள் உதவித்தொகை, கல்வி உதவித் தொகைகளை வழங்கினார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் துணை வேளண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்ட கனிமொழி எம்.பி., தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 38 லட்சம் ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து பணிகள் நடைபெற்று முடிவடைந்தது.
புதிய கட்டிடம் திறப்பு
இந்நிலையில் நேற்று புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து குப்பனாபுரம், தெற்கு வண்டானம், வடக்கு வண்டானம், கொப்பம்பட்டி ஆகிய ஊர்களில் நடந்த மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு என்ன தேவைகளை கேட்டறிந்து அதற்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
22 பேருக்கு இலவச வீட்டுமனை
நிகழ்ச்சியில் குப்பனாபுரம் கிராமத்தில் 22 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, விதவைகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகைகளையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் கயத்தாறு தாசில்தார் நாகராஜன், முன்னாள் கடம்பூர் பேரூராட்சிமன்ற தலைவர் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர்கள் ராஜதுரை, விஸ்வநாத் ராஜா, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், பேரூர் செயலாளர்கள் கயத்தாறு சுரேஷ்கண்ணன், கடம்பூர் பாலகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் கனகராஜ், துணை தலைவர் சுப்புராஜ், பேரூராட்சிமன்ற கவுன்சிலர்கள் நயினார், செல்வகுமார், மாரீஸ்வரி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வக்கீல் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் மோகன், ஒன்றிய துணைச் செயலாளர் பொன்னுசாமி, கடம்பூர் வருவாய் ஆய்வா ளர் பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.