தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பயனாளிகளுக்கு ரூ.450 கோடி கடன் உதவி- 101-வது நிறுவன தின விழாவையொட்டி வழங்கப்பட்டது
- 80 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள், 209 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
- 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடிக்கான கடன் உதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. முன்னாள் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிறுவன தின விழாவில் ஒரு பகுதியாக வங்கி பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்திய வங்கியின் நிறுவனர்களுக்கு தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தப் பட்டது.
வங்கியின் 'மேன்ட் இ-லாபி'-யை வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியு மான எஸ்.கிருஷ்ணன், செயின்ட் மேரிஸ் கல்லூரி பேராசிரியர் ஷிபானா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 80 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள், பல்வேறு இடங்களில் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 209 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து தூத்துக்குடி யில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
முகாமை நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பொது மேலாளர் (கடன் பிரிவு) நாராயணன் வரவேற்றார். இதில் மருத்துவ கல்லூரி டீன் சிவகுமார், தொழில திபர்கள் தங்கவேல் நாடார், டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கடனாளிகளுக்கு கடன் தொகைக்கான கடிதங்களை வழங்கினர்.
வங்கியின் கடன் பிரிவு துணை பொது மேலாளர் விஜயன் நன்றி கூறினார். இந்த கடன் வழங்கும் முகாம் வங்கியின் 12 மண்டலங் களிலும் நடைபெற்றது. இதில் மொத்தமாக 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடிக்கான கடன் உதவி வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாலையில் 101-வது நிறுவன தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள், வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியால் கவுரவிக்கப்பட்டனர்.
பொது மேலாளர் (இயக்கம் மற்றும் சேவைகள் பிரிவு)சூரியராஜ் வரவேற்றார். அப்போது வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்த வங்கியின் முன்னாள் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தியை வரவேற்று கவுரவித்தார். தொடர்ந்து இருவரும் சிறப்புரை ஆற்றினர்.
முன்னாள் இயக்குனர் சி.எஸ்.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் வங்கியின் கால் சென்டரை சிறப்பு விருந் தினர் கே.வி.ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.
நிறுவன தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முடிவில் கடன் மீட்பு துறை பொது மேலாளர் இன்பமணி நன்றி கூறினார்.