புளியங்குடி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
- வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு நேரத்தில் டி.என். புதுக்குடி வனப்பகுதிகளில் ரோந்து வந்தனர்.
- 2 பேரும் காட்டுப்பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர்.
புளியங்குடி:
புளியங்குடி டி.என். புதுக்குடி பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
காட்டுப்பன்றி வேட்டை
அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் வனசரக அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வனவர்கள் மகேந்திரன், குமார், வனக்காப்பாளர்கள் முத்துப்பாண்டி, முருகேசன், அனிதா, வேட்டை தடுப்பு காவலர்கள் மாரியப்பன், தாசன் ஆசிர்வாதம் ஆகி யோர் இரவு நேரத்தில் டி.என். புதுக்குடி வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிந்தா மணியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சண்முகராஜ் (வயது 27), புளியங்குடியை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்குமார் (26) ஆகியோர் காட்டுப் பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அவர்களை மடக்கி பிடித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரூ. 50 ஆயிரம் அபராதம்
இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் 2 பேருக்கும் ரூ 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.