அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த பிளஸ்-2 மாணவருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல்
- அரிவாள் வெட்டில் காயமடைந்த சின்னத்துரை,சந்திரா செல்வி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மாணவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை:
நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை மற்றும் 9-ம் வகுப்பு படித்து வரும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவரும், சக மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரிவாள் வெட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேலும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு மருத்துவர்களை சந்தித்து அவர்கள் இருவரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராஜா, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலை வர் ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகி சுடலை குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.