சேலம் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் ெஜயிலில் அடைப்பு 15 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்
- இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
- இருசக்கர வாகனம் மற்றும் 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருேக உள்ள சாத்தப்பாடியை சேர்ந்த சாராய வியாபாரி கண்ணன் மகன் தனபால் (வயது 30).
15 வழக்குகள்
இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குள் உள்ளது. குறிப்பாக கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை செய்தல் என 15 வழக்குகள் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் உள்ளது.
இந்த நிலையில் தனபால் தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார், அவரை கைது செய்வதற்காக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் பிடிபடாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தார். இதனால் தனிப்படை போலீசார், அவரை சுற்றி வளைத்து பிடிக்க வியூகம் வகுத்து சாத்தப்பாடி பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
110 லிட்டர் சாராயம் பறிமுதல்
இந்த நிலையில் சம்பவத்தன்று தனபால் சாராயத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ேபாலீசார், தனபாலை கைது செய்து, இருசக்கர வாகனம் மற்றும் 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
ஜெயிலில் அடைப்பு
பின்னர் அவரை, பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச்சென்று ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.