உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் பாதுகாப்பு பணிக்கு சேலத்தில் இருந்து 530 போலீசார் பயணம்

Published On 2023-09-10 08:27 GMT   |   Update On 2023-09-10 08:27 GMT
  • இமானுவேல் சேகரனாருக்கு நினை வஞ்சலி செலுத்தவுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
  • சேலம் மாநகர போலீசில் இருந்து துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், உதயகுமார், 4இன்ஸ்பெக்டர்கள், 230 போலீசார், ராமநாத புரத்திற்கு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.

சேலம்:

இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பி னரும் வந்து, இமானுவேல் சேகரனாருக்கு நினை வஞ்சலி செலுத்தவுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலம்

சேலம் மாநகர போலீசில் இருந்து துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், உதயகுமார், 4இன்ஸ்பெக்டர்கள், 230 போலீசார், ராமநாத புரத்திற்கு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். இதேபோல், சேலம் மாவட்ட போலீசில் இருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் அமலஎட்வின், சண்முகம், 7 இன்ஸ்பெக் டர்கள், 300 போலீசார், குமாராசாமிபட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் சேலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாரும் சென்றுள்ளனர். அவர்கள் வாகன போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

Tags:    

Similar News