மேட்டூர் காவிரி ஆற்றில் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது
- மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
- அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு வளர்க்கப்படும் மீன்கள் உரிமம் பெற்ற மீன வர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .
இதற்காக அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
6 லட்சம் மீன் குஞ்சுகள்
நடப்பாண்டில் முதல்கட்ட மாக அணை யின் நீர்த்தேக்க பகுதியான மாசிலாப் பாளையம் காவிரியாற்றில் மீன்வளத்துறை சார்பில் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதில் ரோகு 4.5 லட்சமும், மிர்கால் 1.5 லட்சம் மீன் குஞ்சுகளும் விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் கோகுல ரமணன் ஆர்.டி.ஓ. தணிகாசலம், சதாசிவம்
எம்.எல்.ஏ. (பா.ம.க.) மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.