உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு வீரர்கள் செல்போன் கடையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த காட்சி.

செல்போன் கடையில் தீ விபத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Published On 2023-11-23 09:26 GMT   |   Update On 2023-11-23 09:26 GMT
  • (வயது 43). இவர் கடந்த 20 வருடங்களாக சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் வீரபாண்டியார் நகரில் ஸ்ரீ சிவசக்தி கம்யூனிகேஷன் என்ற பெயரில் பழைய செல்போன் கடை நடத்தி வருகிறார்.
  • காலை 9 மணி அளவில் கடை பூட்டப்பட்டிருந்த நிலையில் கடையின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை அந்த பகுதியினர் பார்த்தனர்.

சேலம்:

சேலம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 43). இவர் கடந்த 20 வருடங்களாக சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் வீரபாண்டியார் நகரில் ஸ்ரீ சிவசக்தி கம்யூனிகேஷன் என்ற பெயரில் பழைய செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இந்த கடையில் செல்போன்கள் பழுது சரி பார்த்து கொடுப்பதுடன் பழைய செல்போன்களையும் வாங்கி சரி செய்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்து

இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் கடை பூட்டப்பட்டிருந்த நிலையில் கடையின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை அந்த பகுதியினர் பார்த்தனர். உடனடியாக சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அங்கு எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அக்கம் பக்கம் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

ஆனாலும் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் செல்போன்கள் என சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மின் கசிவு

மின் கசிவு காரண மாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News