சேலத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
- தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
- எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகஜோதி தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் ரமேஷ் தொடக்க உரையாற்றினார்.
இதில் செயலாளர் மலர்விழி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தில் ராமாயி, ஜெயபாரதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.