அம்மா உணவகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை
- சென்னையில் முழுமையான வடிகால் வசதி செய்யப்பட்டிருந்தால் தண்ணீர் தேங்காத சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கலாம்.
- சென்னை மாநகரத்தில் இருக்கின்ற அம்மா உணவகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
சேலம்:
ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் முழுமையான வடிகால் வசதி செய்யப்பட்டிருந்தால் தண்ணீர் தேங்காத சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கலாம். தி.மு.க. ஆட்சி நிர்வாக திறமை இல்லை. நிறைய திடங்களுக்கு நிதி இல்லாமல் தள்ளாடுவதாக இந்த அரசு தெரிவிக்கிறது.
அம்மா உணவகம்
சென்னை மாநகரத்தில் இருக்கின்ற அம்மா உணவகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதனால் தரமான உணவு அம்மா உணவகத்தின் மூலமாக சென்னையில் வசிக்கிற மக்களுக்கு கிடைக்கவில்லை. பல அம்மா உணவகங்கள் மூடப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
நிதி
ஏழை, எளியோர் அம்மா உணவகத்தில் மலிவு விலையில் அவர்கள் உணவு அருந்துவதற்கான தொடங்கப்பட்ட திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.