உள்ளூர் செய்திகள்

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி;தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Published On 2023-05-31 09:29 GMT   |   Update On 2023-05-31 09:29 GMT
  • உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற நெட்- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

சேலம்:

கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற நெட்- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள். அதன்படி நடப்பாண்டு உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சிக்கான நெட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு-2023 அறிவிப்பு இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

தமிழ்நாட்டில் இந்த தேர்வு அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, ேகாவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், விழுப்புரம், விருது நகர், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இந்த மையங்களில் வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ண ப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரி வினருக்கு ரூ.1150, ஓபிசி., பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.325 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags:    

Similar News