மேட்டூர் அணை பூங்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் குவிந்தனர்
- மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
- கோடை விடுமுறையை ஒரு வார காலமே உள்ளதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேட்டூர்:
மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்வளத்து றையில் பராமரிப்பில் உள்ள இப்பூங்காவில், கோடை விடுமுறையை ஒரு வார காலமே உள்ளதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
காவேரி ஆற்றில் வெகு நேரம் நீராடி மகிழ்ந்த அவர்கள் பூங்காவுக்கு சென்று புல் தரையில் அமர்ந்து பொழுதை கழித்த னர். மேலும் இங்கிருந்த பாம்பு, முயல் பண்ணையை கண்டு மகிழ்ந்தனர். சிறிய வர், பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி ஊஞ்ச லாடியும், சறுக்கல் ஆடியும் மகிழ்ந்தனர். மேட்டூர் அணை மீன்களை வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர். இதனால் வியாபாரமும் சூடு பிடித்தது. மேலும் பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் உணவும் அருந்தினர்.
அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், மேட்டூர் கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் 14,964 பேர் மேட்டூர் அணை பூங்காவுக்கு வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.74 ஆயிரத்து 820 வசூல் ஆனது. வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 1062 பேர் வந்து சென்றனர்.