37-வது தேசிய விளையாட்டு போட்டிகளில்சேலத்தை சேர்ந்த மாணவி வெண்கல பதக்கம் வென்று சாதனை
- சேலத்தை சேர்ந்த அனுஷியா ப்ரியதர்ஷினி டேக்வாண்டோ - 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
- இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆைணயத்தின் மிஷன் சர்வதேச பதக்க திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு டேக்வொண்டொ பயிற்சி பெற்று வருகிறார்.
சேலம்:
கோவாவில் நடைபெற்று வரும் 37-வது தேசிய விளையாட்டு போட்டிகளில் சேலத்தை சேர்ந்த அனுஷியா ப்ரியதர்ஷினி டேக்வாண்டோ - 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இவர் கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை டெல்லி உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி லக்னோவில் நடைபெற்ற ஓபன் செலஷன் டெரயல்ஸ் - ஓய்ல்டு கார்டு என்டீரி டேக்வாண்டோ போட்டியில் 62 கிலோ எடை பிரிவில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் இருந்து 37-வது தேசிய அளவிலான விளையாட்டு டேக்வாண்டோ விளையாட்டில் பங்குபெற்றவர்களில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை அனுஷியா ப்ரியதர்ஷினி ஆவார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆைணயத்தின் மிஷன் சர்வதேச பதக்க திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு டேக்வொண்டொ பயிற்சி பெற்று வருகிறார்.
அனுஷியா ப்ரியதர்ஷினிக்கு இவர் பயிலும் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்களது வாழ்துக்களை தெரிவித்துள்ளனர்.