கஞ்சா விற்பனையை தடுக்ககோரிபொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
- பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
- பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
சேலம்:
சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது அங்கு பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க அனைவரையும் அனுமதிக்க முடியாது. எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதிகபட்சம் 5 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றனர்.
இதனை தொடர்ந்து 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அவர்கள் மனு கொடுத்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக விரோதிகள் அட்டகாசம்
வாய்க்கால் பட்டறை அரசு பள்ளி அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த பகுதியில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பதும், மது குடிப்பதும் என அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நடந்து செல்லும் பெண்களை தகாத வார்த்தையில் பேசி மிரட்டி வருகின்றனர்.
மேலும் கடந்த 8-ந் தேதி சிறுமி ஒருவரை தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். இதனால் தட்டி கேட்ட எங்கள் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்கினர்.
இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே அப்பகுதியில் கஞ்சா, மது குடித்து ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக கைது செய்து பொதுமக்களை அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.