எலக்ட்ரிக்கல் ஷோரூமில் புகுந்து மின் சாதன பொருட்கள் கொள்ளை
- கருப் பணம்பட்டி கிராமத்தில் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
- கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், சி.சி.டிவி கேமராக்கள் உடைக்கப்பட்டும் இருந்தது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள கருப் பணம்பட்டி கிராமத்தில் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சா லையில், ஆர்டரின் பேரில் மின் சாதன பொருட்கள் தயார் செய்து கொடுக்கப்படு கிறது. இந்த தொழிற்சா லையை சேலத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தொழிற்சாலையை ஒட்டியே மின் சாதன பொருட்களை சில்லரையாக விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார். ஓமலூரில் இருந்து மேச்சேரி செல்லும் சாலையில் கருப்பணம்பட்டி மேட்டில் இந்த கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரவு கடைய மூடிவிட்டு சென்ற கடை ஊழியர்கள் காலையில் கடைக்கு வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், சி.சி.டிவி கேமராக்கள் உடைக்கப் பட்டும் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர் கள் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் வைத்தி ருந்த பணம் 12 ஆயிரம் ரூபாய், கடையில் இருந்த காப்பர் மின் சாதன பொருட்கள், சி.சி.டி.வி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க் ஆகிவை கொள்ளை போயிருந்தன.
இது தொடர்பாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசா ரும், ஓமலூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் வரவழைக் கப்பட்டு கை ரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக் பட்டது. இந்த துணிகர திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.