- சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
சேலம்:
சேலம் களரம்பட்டி இட்டேரி ரோடு பகுதியில் ஏராளமான சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இது குறித்து கவுன்சி லர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தெந்த நடவடிக்கும் எடுக்காததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீராம் நகர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் சாயப்பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. பட்டறைகளில் இருந்து காலை 10 மணிக்கு மேல் கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாயப்பட்டறை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.