உள்ளூர் செய்திகள்

கட்டிட தொழிலாளி கொலையில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-09-15 10:17 GMT   |   Update On 2023-09-15 10:17 GMT
  • சேலம் கன்னங்குறிச்சி சரவணா நகரை சேர்ந்தவர் கொல்லப்பட்டி குமார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட ெதாழிலாளி பாபு (வயது 34) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்தது.
  • இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாபுவை சமாதானம் பேசலாம் என கூறி அவரை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே அழைத்து சென்றனர்.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி சரவணா நகரை சேர்ந்தவர் கொல்லப்பட்டி குமார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட ெதாழிலாளி பாபு (வயது 34) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு குமார், பாபுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு அடி நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாபுவை சமாதானம் பேசலாம் என கூறி அவரை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே அழைத்து சென்றனர். அங்கு வைத்து குமார், பிரேம்குமார் உள்பட 9 பேர் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் பாபு உடன்படவில்லை. ஆக்கிரமித்த ஒரு அடி நிலத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குமார் தரப்பு பாபுவை அடித்து உதைத்து ஆயுதங்களால் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இந்த ெகாலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆயுள்தண்டனை

இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், பிரேம்குமார் உள்பட 9 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, ரத்தம் படிந்திருந்த சட்டை உள்ளிட்ட ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ரவி இன்று தீர்ப்பு கூறினார். அதில் குமார், பிரேம்குமார் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் 2 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பை யொட்டி அவர்களது உறவினர்கள் கோர்ட்டில் கூடியிருந்தனர். குமார், பிரேம்குமார் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதும் சோகம் அடைந்தனர். 2 பேரையும் ஜெயிலில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News