- தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் தீவிரமடைந்துள்ளது.
- இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.
சேலம்:
தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசுவதுடன், மழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நேற்று மாலையில் மேட்டூர், காடையம்பட்டி, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர், ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதில் மேட்டூரில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாநகரத்தில் கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மா பேட்டை, புதிய பஸ் நிலை யம், 5 ரோடு பகுதிகளில் மழை பெய்தது. இதில் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- மேட்டூர்-34, காடையாம்பட்டி-9, சேலம் - 8.7, பெத்தநாயக்கன் பாளையம் - 5, ஓமலூர்- 4.6, ஆத்தூர்- 4 ஏற்காடு - 4, கெங்கவல்லி - 2, எடப்பாடி - 1, சங்ககிரி - 12 என சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 73.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இன்று கனமழை பெய்யும்
இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதி களில் மேலடுக்கில் வளி மண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகம் முழுவதும் மேலும் மழை தீவிரமடைந்துள்ளது.
இதையொட்டி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்க
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.