உள்ளூர் செய்திகள்

குறைதீர்ப்பு முகாமில் கலெக்டர் கார்மேகம் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெற்ற காட்சி.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

Published On 2023-11-06 09:37 GMT   |   Update On 2023-11-06 09:37 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
  • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவ லர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டும னைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, மாற்றுத்திற னாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகர ணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடுகள் குறித்தும், மாற்றுத்திற னாளிகளிடமிருந்து உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 332 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் தூய்மையாக இருப்பதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்வதுடன் தங்கள் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News