சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியது
- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படஉள்ளது.
- இதையொட்டி அதில் பயன்பெற விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படஉள்ளது. இதையொட்டி அதில் பயன்பெற விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
2 கட்டம்
முதல் கட்ட விண்ணப்ப பதிவு வருகிற 24-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது . 2-ம் கட்டமாக 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் வினியோகம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது. இதை தொடர்ந்து ரேசன் கடை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று அதனை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட குடும்ப தலைவிகள் அதனை பூர்த்தி செய்து விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வழங்க வேண்டும். மகளிர் உரிமை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க மாவட்டத்தில் 10 துணைப்பதிவாளர்கள் தலைமையில் 40 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஆய்வு
இதற்கிடையே டோக்கன் வழங்கும் பணியை முதல் கட்டமாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கன்னங்குறிச்சியில் இன்று காலை ஆய்வு செய் தார். அப்போது டோக்கன் வினியோகம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் உள்பட பலர் உடன் இருந்தனர்.