உள்ளூர் செய்திகள்

கள் இறக்க அனுமதி கேட்டு சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

கள் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் போராட்டம்

Published On 2023-07-27 08:08 GMT   |   Update On 2023-07-27 08:08 GMT
  • விவசாய சங்கங்கள் சார்பில் கள் இறக்க அனுமதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாரா யக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

சேலம்:

விவசாய முன்னேற்ற கழகம், தமிழ்நாடு கள் இயக்கம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் உள்பட பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் கள் இறக்க அனுமதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொடர்ந்து ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்ற விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்லராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:

பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாரா யக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

போராட்டம்

கள் விற்பனைக்கு அனு மதி அளிக்க கேட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 21-ந் தேதி கள் இறக்கி விற்கும் போராட்டம் நடைபெறும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் கள் இறக்கி விற்க அனுமதிக்கும் கட்சிக்கு விவசாயிகள் ஆதர வளிப்பார்கள். மேகதாது அணை கட்டுவதை தடுக்கா விட்டால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதி பாலைவனமாகிவிடும்.

கொப்பரை தேங்காயை மத்திய அரசு வருடம் முழுவதும் கொள்முதல் செய்து கிலோ ஒன்றுக்கு ரூ.150 வழங்க வேண்டும். தேங்காய் எண்ணையை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும்.

சத்துணவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வாரத்தில் 2 முறை இளநீர் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கள் நல்லுசாமி, இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் தங்கராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News