உள்ளூர் செய்திகள்

பூதேவி, சீதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்த சென்றாய பெருமாள்.

சென்றாயப்பெருமாள் கோவில் தேரோட்ட ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2023-06-02 05:04 GMT   |   Update On 2023-06-02 05:04 GMT
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான சீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
  • தேர்த்திருவிழாவை யொட்டி நேற்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக ளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான சீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, ஆங்கி லேயர் ஆட்சி காலத்தில், 1942–ம் ஆண்டு ஆவணி மாதம் 12 –ந் தேதி, ரூ.750 செலவில் தத்ரூபமான சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான மரத்தேர் உருவாக்கப்பட்டது.

இந்த பழைய மரத்தேர் வலுவிழந்ததால், ரூ.20 லட்சம் செலவில், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய மரத்தேர் அமைக்கப்பட்டது. இதனை யடுத்து, தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.. தேர்த்திருவிழாவை யொட்டி நேற்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக ளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) சென்றாயப்பெருமாள், பூதேவி, சீதேவியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனை களும், திருக்கல்யாண வைபோவமும், உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா உற்சவமும் நடைபெறு கிறது.

இதனையடுத்து, நாளை (சனிக்கிழமை) காலை திருத்தேர் நிலை பெயர்த்த லும், தொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் தீர்க்கும் நிகழ்வுகளும், மாலை 3 மணிக்கு ராஜவீதிகளில் தேரோட்டமும் நடைபெறு கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News