- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- குறிப்பாக தலைவாசல் பகுதியில் ½ மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை ெபய்தது.
கன மழை
குறிப்பாக தலைவாசல் பகுதியில் ½ மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக இருந்தது. ேமலும் ஏற்காட்டில் வசிக்கும் மக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
31 மி.மீ. மழை
மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 17 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கரியகோவில் 5, பெத்தநாயக்கன்பாளையம் 5, ஆனைமடுவு 4, கரியகோவில்1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 31 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.