- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
- இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.
திடீர் மழை
இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், கெங்கவல்லி, மேட்டூர், தம்மம்பட்டி, காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது.
67.4 மி.மீ. பதிவு
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 33.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 13, கெங்கவல்லி 10, மேட்டூர் 6.2, தம்மம்பட்டி 4, காடையாம்பட்டி 1 மி.மீ என மாவட்டம் முழுவதும் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது.