ஏற்காட்டில் கிணற்றில் தவறி விழுந்தவர் காயத்துடன் மீட்பு
- சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
- அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (55). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழையினால் கிணற்றை சுற்றி சேறும், சகதியுமாக இருந்துள்ளது.
இதனால் எதிர்பாராத விதமாக கால் வழுக்கி 20 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் செல்வமணி தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.