உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2023-11-01 09:29 GMT   |   Update On 2023-11-01 09:29 GMT
  • மூங்கில்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோரையன்காடு பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
  • இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சேலம்:

சேலம் கருப்பூரை அடுத்த மூங்கில்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோரையன்காடு பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திர மடைந்த அந்த பகுதி மக்கள் தேக்கம்பட்டியில் இருந்து கருப்பூர் வழியாக சேலம் வரும் சாலையில் திரண்ட னர். பின்னர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து 40-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சேலம் வந்த பஸ்சையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கருப்பூர் போலீசார், பஞ்சாயத்து செயலாளர், கவுன்சிலர்கள் அவர்க ளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 2 நாட்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் 20 நிமிடம் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News