65 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது
- அங்க முத்து (வயது 80). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி மேனாவுடன் வசித்து வருகிறார்.
- அதிகாலை 2 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.92 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்க வல்லி அருகே உள்ள நடுவ லூரை சேர்ந்தவர் அங்க முத்து (வயது 80). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி மேனாவுடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் கடந்த 1-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.92 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்ற னர். இதுகுறித்து கெங்க வல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் ஆத்தூர் அருகே உள்ள அம்மா பா ளையத்தை சேர்ந்த வெங்க டேஷ் (29), கொள்ளை யடித்தது தெரிய வந்தது. அவரிடம் நகைகளை மீட்டு தொடர்ந்து விசாரித்தனர்.
இதில், அவர் மீது சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், புதுக் கோட்டை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களில் 65 திருட்டு வழக் குகள் இருப்பது தெரியவந் தது. இதையடுத்து வெங்க டேசை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.