விஜயதசமியையொட்டி அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
- நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கப்படும் காரியம் வெற்றி கரமாக அமையும் என்பதால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
- அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசும், தனியார் பள்ளிகளும் தீவிரம் காட்டி வருகிறது.
சேலம்:
நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கப்படும் காரியம் வெற்றி கரமாக அமையும் என்பதால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசும், தனியார் பள்ளிகளும் தீவிரம் காட்டி வருகிறது .
அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். தொடர்ந்து காலை முதலே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இதே போல தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
மாணவர்களுக்கு கையை பிடித்து வித்யாரம்பம் நிகழ்ச்சியுடன் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக நடந்தது. அரசு பள்ளிகளில் கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளிகளில் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள்.