சேலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
- தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு
6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியது.
அடம்பிடித்து அழுதனர்
அப்போது ஒரு சில குழந்தைகள் பெற்றோர் வண்டியில் இருந்து இறக்கி விடும் போது பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்து அழுதனர்.
இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப் பட்டதால் 4 ரோடு, கோட்டை, சாரதா கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், திருவாகவுண்டனூர், ராமகிருஷ்ணா சாலை, குகை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
போக்குவரத்து நெரிசல்
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பள்ளிகள் திறக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் முன்பு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பள்ளியின் முன்பு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளா னார்கள் என்றனர்.