சேலத்தில் சம்பளம் கேட்ட பெயிண்டருக்கு கத்திக்குத்து
- கன்னியப்பன் மகன் கோகுல்ராஜ் (வயது 29) என்ற காண்ட்ராக்டரிடம், கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார்.
- ராமச்சந்திரன் காண்ட்ராக்டர் கோகுல்ரா ஜிடம் வேலை செய்ததற்கான சம்பள பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் முத்துகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 27). பெயிண்டரான இவர், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடமலை பகுதியைச் சேர்ந்த கன்னி யப்பன் மகன் கோகுல்ராஜ் (வயது 29) என்ற காண்ட்ராக்டரிடம், கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவர்கள் தற்போது சேலம் தாத காப்பட்டி மூணாம் கரடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமச்சந்திரன் காண்ட்ராக்டர் கோகுல்ரா ஜிடம் வேலை செய்ததற்கான சம்பள பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த, கோகுல்ராஜ் கத்தியால் ராமச்சந்திரன் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படு காயம் அடைந்த ராமச்சந்தி ரனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்று காலை கோகுல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.