உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் பசுமாட்டை சுட்டு கொன்றவருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2023-06-03 07:26 GMT   |   Update On 2023-06-03 07:26 GMT
  • ஏற்காடு மாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகள் விஷ்ணுபிரியா. இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
  • வடமன் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி மூலம் எங்களது பசுமாட்டை சுட்டு கொன்று விட்டார்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் கிரா மத்தை சேர்ந்த வரதராஜன் மகள் விஷ்ணுபிரியா. இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், மார மங்கலம் பகுதியில் வசிக்கும் வெங்கடாசலம் மகன் வடமன் (45), என்பவரது தோட்டத்தில், கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடமன் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு எடுத்திருந்தது கண்டுபி டிக்கப்பட்டு, அவருக்கு ரூ.55,000 அபராதம் விதித்தனர்.

இந்த நிலையில், எனது தந்தைக்கும் வடமனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் மின்சார துறை அதிகாரிகளிடம் எனது தந்தை தான் இந்த விவரத்தை கூறியிருப்பார் எனக் கருதி, கடந்த 31-ந் தேதி, வடமன் தான் வைத்தி ருந்த கள்ளத் துப்பாக்கி மூலம் எங்களது பசுமாட்டை சுட்டு கொன்று விட்டார். அதனால் அவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரின் அடிப்ப டையில் ஏற்காடு போலீசார், வடமன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பசு மாட்டை சுட்டு கொன்று விட்டு தலைமறைவாக உள்ள வடமனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News