சேலத்தில் மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
- மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது.
- சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.
சேலம்:
சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப், இயற்கையை நேசி அமைப்பு ஆகியவை சார்பில் மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது. இதில் சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.
இறுதியில் ஆண்கள் பிரிவில் ஏ.வி.எஸ். கல்லூரி அணி முதல் இடத்தை வென்றது. வி.வி.சி. அணி 2-வது இடமும், சாய்டிரைலர்ஸ் அணி 3-வது இடமும், ஓமலூர் கொங்குபட்டி அணி 4-வது இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரிஸ் பள்ளி அணி வென்றது. சக்தி கைலாஷ் கல்லூரி அணி 2-வது இடத்தையும், ஆத்தூர் பாரதியார் பள்ளி அணி 3-வது இடத்தையும், சென்னை மினிஸ்போர்ட்ஸ் அணி 4-வது இடத்தையும் பெற்றன.
பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் இயக்குனர் சீனிவாசன் வரவேற்று பேசினார். போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா கலந்து கொண்டு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.