சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழை நீடிப்பு
- மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது.
குறிப்பாக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 3.6, கரியகோவில் 2, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 13.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக மங்களபுரத்தில் 15, பரமத்திவேலூர் 15, கலெக்டர் அலுவலக பகுதி 15 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.