உள்ளூர் செய்திகள்

  சாலையை ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூர்- ஈரோடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்.

மேட்டூர் அருகே சாலை ஆக்கிரமிப்புபொதுமக்கள் மறியல் -பரபரப்பு

Published On 2023-11-06 07:15 GMT   |   Update On 2023-11-06 07:15 GMT
  • மேட்டூர் 29-வது வார்டு ஜீவா நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
  • இந்த நிலையில் தனி நபர் ஒருவர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து புதியதாக கட்டிடம் கட்டி வருகிறார். இதனால் பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேட்டூர்:

மேட்டூர் 29-வது வார்டு ஜீவா நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, முல்லை நகர் செல்வதற்கு 80 அடியில் பிரதான சாலை உள்ளது.

சாலை ஆக்கிரமிப்பு

இந்த நிலையில் தனி நபர் ஒருவர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து புதியதாக கட்டிடம் கட்டி வருகிறார். இதனால் பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த பணியை நிறுத்தகோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மேட்டூர்- ஈரோடு செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

பணி நிறுத்தம்

இதையடுத்து சாலை மறியல் முயற்சியை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிட பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News