உள்ளூர் செய்திகள்

கைதான வாலிபர் தஸ்தகீர்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 6.95 லட்சம் மோசடி

Published On 2023-11-10 09:54 GMT   |   Update On 2023-11-10 09:54 GMT
  • நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
  • தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர், ரஹீம், நசீம்.

இவர்களிடம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த அவர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தஸ்தகீர் பணம் வாங்கி மோசடி செய்ததாக தலைவாசல் போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மேலும் அவர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதியில் 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதும், நாகப்பட்டினம் சிறையில் தஸ்தகீர் அடைக்கப்பட்டு ள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், தஸ்தகீரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News