சேலம் அழகாபுரம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்
- சேலம் ஊரக குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவி களுக்கான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
- கிளேஸ் ஸ்புரூக்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 2 நாட்கள் நடை பெற்றது.
கருப்பூர்:
தமிழ்நாடு அரசின் பள்ளி துறை சார்பில் சேலம் ஊரக குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவி களுக்கான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதன் இறுதிப்போட்டி சேலம் அழகாபுரம் நகர மலை அடிவாரத்தில் உள்ள கிளேஸ் ஸ்புரூக்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 2 நாட்கள் நடை பெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த
900-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் கோமதி ராணி, அனைவரையும் வரவேற்று மாணவர்கள் ஏற்றி வந்த ஜோதியை பெற்றுக் கொண்டார். கிளேஸ் ஸ்புரூக் மெட்ரிக் பள்ளி செயலாளர் பால சுப்பிரமணியம், தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளர் சுப்பிர மணியம், மாவட்ட விளை யாட்டு துறை ஆய்வாளர் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சுழல் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
விழாவில் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.