சேலம் குமாரசாமிப்பட்டியில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கானஉடல் தகுதி தேர்வு தொடங்கியது
- பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கு ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது.
- இதில் சேலம் மாவட்டத்தில் 311 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.
சேலம்:
சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கு ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது.
311 பேர் தேர்வு
இதில் சேலம் மாவட்டத்தில் 311 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியி டத்திற்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் இந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
இதையொட்டி சேலம் ஆயுதப்படை மைதா னத்தில் காலை 7 மணிக்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் அளத்தல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியயை நடைபெற்று வருகிறது. இதில் தேர்வர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஓட்டப்பந்தயத்தில் ஓடினர். பாதியில் நின்றவர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
கூடுதல் பாதுகாப்பு
நாளை (8-ந் தேதி) உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடக்கிறது. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் உடல் தகுதி தேர்வு நடக்கும் மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையே சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஷ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தனர்.