உள்ளூர் செய்திகள்

மாநில கைப்பந்து போட்டியில்சேலம் பெண்கள் அணி சாம்பியன்

Published On 2023-08-16 09:21 GMT   |   Update On 2023-08-16 09:21 GMT
  • வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ.கல்லூரியில் நடத்தின.
  • இந்தபோட்டியில் 25-15,25-16, 18-25 25-17என்ற புள்ளிகணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

சேலம்:

சேலம் வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ.கல்லூரியில் நடத்தின.

19 வயதுக்கு உட்பட்ட இந்த போட் டியில் ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 31 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. முடிவில் பெண்கள் பிரிவில் சேலம் மற்றும் சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நேற்று மாலை விளையாடின. இந்தபோட்டியில் 25-15,25-16, 18-25 25-17என்ற புள்ளிகணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட் டத்தை தட்டி சென்றது. சென்னை அணி 2-ம் பரிசும், ஈரோடு அணி 3-ம் பரிசும் கிருஷ்ணகிரி அணி 4-ம் பரி சும் பெற்றன. மற்றொரு ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் கோவை மற்றும் நெல்லை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று மோதின. முடிவில் கோவை அணிமுதலிடமும், நெல்லை அணி இரண்டாம் இடமும் நாகை அணி மூன்றாம் இடமும், கிருஷ்ணகிரி அணி நான்காம் இடமும் பிடித்தன. இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி கலந்து கொண்டு வெற்றி பெற்ற கைப்பந்து அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர்கள் ராஜாராம், அகிலா தேவி, ரான்சன், லாரன்ஸ் பாஸ்கர், டாக்டர். செந்தில் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News