விபத்தில் வாலிபர் பலி-லாரி டிரைவர் கைது
- பச்சக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் டிரைவர் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், எந்த சைகையும் செய்யாமல் லாரியை திருப்ப முயன்றுள்ளார்.
- முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ஜீவகாந்த் இறந்து விட்டார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி பச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் ஜீவகாந்த் (19), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு 9 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் பவானி பகுதியில் இருந்து சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பச்சக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் டிரைவர் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், எந்த சைகையும் செய்யாமல் லாரியை திருப்ப முயன்றுள்ளார். இதை கவனிக்காததால் ஜீவகாந்த் லாரியின் பின்னால் மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜீவகாந்த்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ஜீவகாந்த் இறந்து விட்டார்.
இதுகுறித்து சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சேலத்தை சேர்ந்த சரத்குமார் (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த ஜீவகாந்த், வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.